மூச்சு விடும் பூமி
விடியலின் தென்றலில்
விஷம் கலந்திடாமல்,
படியும் பனித்துளியில்
நஞ்சு படிந்திடாமல்,
காத்திட வேண்டும் இந்த
பூமியின் சுவாசத்தை!
தாகம் தீர்க்கும் நீரினில்
தூய்மை ததும்பட்டும்,
மக்கள் நடமாடும்
வழியெங்கும் பசுமை கொஞ்சட்டும்!
குப்பைகள் இல்லாத
கூடாரமாய் நம் ஊர் மாறட்டும்,
குறையற்ற சுகாதாரமே
மனித குலத்தின் வேராகட்டும்!

கருத்துகள்
கருத்துரையிடுக