ஒருதலைக் காதல்
அன்று இரவு கனத்த மழையும் இடியும் அதிகமாக இருந்தது. வெள்ளம் வீதியை மூடியிருந்தது. இரவு கடந்து பகலானது; நானும் எனது தோழிகளும் வெள்ளத்தைக் கடந்து வீதியில் சென்று கொண்டிருந்தோம். அங்கே அதிகமான ஆண்கள் பாலத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சூரியன் மேகத்தின் மேல் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆண்களில் ஒருவன் வாழைப்பழத் தோலை வீசியிருந்தான். வீதியில் நாங்கள் அதன் வழியாகச் செல்லும் போது நான் வழுக்கிக்கொண்டு போனேன். என்னை தாங்கிப் பிடிப்பதற்காக ஒரு ஆண் என்னை நோக்கி வந்தான். நான் விழாமல் தப்பித்துவிட்டேன்; அவனும் பின்னாடி சென்றுவிட்டான். அவனை எங்கேயோ கண்ட ஞாபகம்! அவன் யாரு என்று யோசித்துக்கொண்டே தோழிகளுடன் வீடு திரும்பினேன்.
வீட்டில் எதைப் பார்த்தாலும் அவன் வந்து வந்து கண்முன் தோன்றித் கொண்டே இருக்கிறான். அவனை மறுபடி பார்க்க வேண்டும் என்று மழையுடன் உரையாடினேன்:
> "இந்த இளவரசியைத்
> தாங்கிப் பிடிப்பதற்காக வந்த
> இளவரசனே!
> உன்னைக் காணத் துடிக்குது
> இந்த இயல்பான இதயம்,
> மறுபடியும் உன்னை எப்பொழுது
>
* காண்பது அன்பே......"
சூரியன் உதித்தே தெரியவில்லை; அவனைக் கனவினில் காண முயற்சித்தேன். அம்மா தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டு என்னைத் தட்டிவிட்டுச் சென்றார். எழுந்து கொண்டு என் அன்றாட வேலையைச் செய்தேன்; அந்தி ஆகிவிட்டது. அவனை மறுபடியும் காண அந்த இடத்திற்குச் சென்றேன்; அவன் அங்கு இல்லை. என் கண்ணீர் மட்டும் மழையாய்ப் பொழிந்தது, சூரியன் சுட்டெரித்தும்!
நான் முதல் தடவை அவனைப் பார்க்கும் போது, அவன் பைக் மேல் அமர்ந்துகொண்டிருந்தான். நான் விழும் போது என்னை தாங்கிப் பிடிக்க வந்தான்; அப்பொழுது அவனது பைக்கைப் பார்த்தேன், அதில் "I love Mom" என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.
அதே பைக், இன்று நான் அவனைக் கண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி (காயமடைந்து) கிடந்தது. பைக் சுக்குநூறாக உடைந்து இருந்தது. அவனை வெள்ளைத் துணியால் மூடுகிறார்கள்; அவனது முகத்தைக் கூட பார்க்கவில்லை. அவனது பைக்கைக் கண்டவுடனே அவன்தான் அது என்று உணர்ந்து கொண்டேன்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை... என் காதல்...!
-

கருத்துகள்
கருத்துரையிடுக