காலத்தின் கைரேகை
ஓடும் நதியில்
தங்கும் நீர்த்துளி எதுவுமில்லை;
கடந்துபோகும் நொடிகளில்
திரும்பிவரும் நேரமுமில்லை!
நேற்றைய காயங்களை
சுமந்து திரிவதை விட,
இன்றைய பொழுதை
சிாிப்போடு வாழ்ந்துவிடு!
பூத்துக் குலுங்கும் பூக்களும்
மாலை வேளையில் வாடிவிடும்;
வாழும் குறுகிய காலத்தில்
அன்பை விதைத்து ஓடிவிட
காலம் உனக்கு
தந்த பெரிய பரிசு...
இந்த "இன்றைய" நொடி மட்டுமே!

கருத்துகள்
கருத்துரையிடுக