இதய எமோஜிகள் தேவையில்லை!
மை தீர்ந்த பேனாவும்...
மௌனம் அடைந்த இரவும்...
என் கவிதையின் தனிமையை
என்னிடம் கேட்கின்றன!
பட்டாசாய் வெடிக்க வேண்டிய வரிகள்,
பயனற்ற சொற்களாய்
பக்கங்களின் ஓரத்தில் கிடக்கின்றன.
என் விரல் வழியும் உதிரத்தை
மை என்று நம்பி வடிக்கிறேன்;
ஆனால், அதைப் படிக்க
அங்கு யாருமில்லை!
இருதய எமோஜிகளும்,
இணையத்தின் கைவிரல் சின்னங்களும்
என் கவிதைக்குச் சற்றும் தேவையில்லை.
அவை வெறும் பிளாஸ்டிக் சிரிப்புகள்,
போலி முகங்களின் அடையாளங்கள்!
எனக்கெல்லாம் ஒன்று போதும்...
என் வரிகளின் வழியே
என் ரத்தம் தொட்டுக் கசிவதை,
உன் கண்கள் அல்ல...
உன் மனம் முழுமையாகப் புரிந்து கொண்டால் போதும்!
காகிதத்தில் சிதறிய என் உயிர்த்தவல்கள்,
உன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு மெல்லிய சாரலாய் வருடட்டுமே...
அதுவே போதும்;
இந்தக் கவிஞனின் பிழைப்புக்கும்
என் கவிதையின் பிறப்புக்கும்!
சே.மு.அஸ்மீத்
கிண்ணியா

கருத்துகள்
கருத்துரையிடுக